Our Feeds


Monday, August 7, 2023

ShortNews Admin

பிரதமரின் கூட்டத்தில் மக்களோடு, மக்களாக அமர்ந்து மக்கள் பிரச்சினையை பேசிய சாணக்கியன் - VIdeo





மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று பிரதமரின் வருகையை முன்னிட்டு நடந்த கூட்டத்தில் மக்களின் சார்பாக மக்களில் ஒருவனாக தமிழரசுக் கட்ச்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பங்குபற்றி இருந்தார். 


இந்த அரசு மற்றும் அரசு சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள், அரசு சார்ந்து திரை மறைவில் செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது மக்களின் உரிமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை, அரசு சார்ந்தவர்களின் ஊழல்களை, மக்களுக்கான அநீதிகளை கண்டுகொள்ளாது உதாசீனப்படுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர். 


அதன் காரணமாகவே அவர் நேற்று அரச அதிதிகளின் வரிசையில் அமராமல் மக்களோடு மக்களாக இவ் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார். 


இவ் கூட்டத்தில் அரச சார் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்கள் பற்றிய ஆவணத்தினையும் பிரதமரிடம் சமர்ப்பித்திருந்தார். 


அதன்போது பிரதமர் இவ் ஊழல்கள் தொடர்பான ஊழல் மோசடி விசாரணைக் குழு ஒன்றினை அமைப்பதாக உறுதியளித்திருந்தார். 


இவ் ஊழல்கள் மக்களுக்கு எதிரான செயல்படும் எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து இவர்களின் வருகைகளை ஒட்டி எமது மக்களுடன் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்ள் முன்னெடுக்கப்படும் என்பதனையும் அவர் மேலும் வலியுறுத்தியிருந்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »