தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இதன்போது 13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் பொலிஸ் அதிகாரத்தைத் தமிழ் தரப்பினருக்கு வழங்குவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரம் தமிழ் தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கான பின்னணி என்ன? என்பது தொடர்பாக அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளார்.
இதற்குப் பதில் வழங்கிய கூட்டமைப்பின் எம்.பி.கள், அபிவிருத்தியடைந்த பல நாடுகளில் அவ்வாறான அதிகாரப்பகிர்வு இருப்பதை எடுத்துக்காட்டியுள்ளனர்.
அத்துடன் போதைப் பொருள் கடத்தல் போன்ற விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக மாகாண பொலிஸ் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
இதுகுறித்து பொலிஸ் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடுவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற சந்திப்பு ஒன்றை இன்னும் இரண்டு வாரங்களில் நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.