Our Feeds


Sunday, August 27, 2023

ShortNews Admin

இலவச விசாவில் அமைச்சர் ஹாபிஸ் நசீர், அவர் மனைவி மற்றும் SLPP, MP மர்ஜான் பளீல் மற்றும் அவர் குடும்பம் ஹஜ்ஜூக்கு போகவில்லையா?

 



கடந்த 2022ம் ஆண்டு ஹஜ் பயணத்தின் போது சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர், அவர் மனைவி மற்றும் SLPP, MP மர்ஜான் பளீல், அவருடைய இளைய மகன் மற்றும் மருமகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சவுதி அரசாங்கத்தினால் ஏழைகள் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக வழங்கப்படும் பேசா (Free Moment Pass) விசா மூலம் ஹஜ்ஜூக்கு சென்ற செய்தியை விடிவெள்ளி பத்திரிக்கை உள்ளிட்ட ஊடகங்களும் ShortNews தளமும் வெளியிட்டிருந்தது. 


தற்போது, இது தொடர்பில் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் இப்றாஹீம் அன்சார் கடந்த 31.07.2023 அன்று பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. 


குறித்த வீடியோவில் சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர், அவர் மனைவி மற்றும் SLPP, MP மர்ஜான் பளீல் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சொந்தப் பணத்தில் ஹஜ்ஜூக்கு சென்றதாக இப்றாஹீம் அன்சார் குறிப்பிட்டுள்ளார். 


குறித்த முக்கியஸ்தர்கள் எந்தப் பணத்தில் விமான டிக்கெட் எடுத்தார்கள் என்பதை பற்றி யாரும் இங்கு விமர்சனம் செய்யவே இல்லை. மாறாக எந்த விசாவில் பயணித்தார்கள் என்பதே விமர்சனமாக மாறியுள்ளது.


அவர்கள் பயணித்தது ஏழைகளுக்கா வழங்கப்படும் பேசா (Free Moment Pass) விசா மூலமே தவிர விசாவை சொந்தப் பணத்தில் அவர்கள் யாரும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகும்.


ஹஜ் பயணத்திற்காக விசா லட்சங்களில் பெறப்படும் நிலையில் அந்த விசாவை இலவசமாக பெற்றுக் கொண்டு பயணித்தவர்கள் தற்போது அதனை மூடி மறைக்க டிக்கட் கதையை அவிழ்த்து விட்டுள்ளார்கள்.


குறித்த அனைவரும் இலவச பேஸா விசாவில் தான் பயணித்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இப்படியான வீடியோக்களினால் தமது குற்றத்தை மறைக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.


இலவச - பேஸா விசாவில் ஹஜ்ஜூக்கு சென்ற MP க்கள் - மனைவியுடன் பயணித்த ஹாபிஸ் நசீர், குடும்பமாக பயணித்த மர்ஜான் பழீல் MP


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »