பாறுக் ஷிஹான்
கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாணவர் தலைவருக்கான சின்னஞ் சூட்டு விழா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமையில் வியாழக்கிழமை(24) இடம்பெற்றது.
இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் வாழைச்சேனை இராணுவப் படை பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி கல்முனை ஸாஹிறாக் கல்லூரி சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியரான மேஜர்.கே.எம்.தமீம் கலந்து சிறப்பித்ததுடன் மாணவ தலைவர்களுக்கான சின்னங்களும் சூட்டப்பட்டது.
அத்துடன் ஒழுக்காற்றுக் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இவ்விழாவிற்கு பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் எம்.ரீ.எம்.அனப் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பழையமாணவர்கள்,பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.