Our Feeds


Monday, August 7, 2023

Anonymous

PHOTOS: சிறப்பாக நடைபெற்ற Twinkle Kids Pre School குழந்தைகளின் விளையாட்டுப் போட்டி

 



Twinkle Kids Pre School விளையாட்டுப் போட்டி க/தெனு அரபா முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் கடந்த சனிக்கிழமை 05/08/ 2023 அன்று வெகு விமர்சையாக இடம் பெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர், இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் கந்துரட Fm முஸ்லிம் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் மற்றும் உளவியல் ஆலோசகர் Miss Fazira Junaideen கலந்து சிறப்பித்தார்.


அவர் தமதுரையில் ஒரு குழந்தையோடு எவ்வாறு அன்பு செலுத்த வேண்டும் மற்றும் ஒரு ஆளுமை மிக்க ஒரு குழந்தையை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்ற தொணிப்பொருளில் உளவியல் சார்ந்த பல விடயங்களை தொட்டு காட்டி சிறப்புரையை நிகழ்த்தினார்.


அறிவிப்பாளர் Mr Nasir நிகழ்ச்சியை தொகுத்து அழகிய முறையில் அறிவிப்பு செய்தார். மற்றும் இந்நிகழ்வில் Wahangkoha Rahmaniya Masjid தலைவர் ஆசிரியர் அன்சார், ஆசிரியை சுமையா, பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் சியாம், ஹில்மி மற்றும் நிர்வாகத்தினர் ஊர் ஜமாத்தினர்கள் என்று நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.


இந்நிகழ்ச்சியில் இறுதியாக பரிசில்களும் சான்றிதழ்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »