Our Feeds


Wednesday, August 16, 2023

SHAHNI RAMEES

சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்..!

 

நாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.



இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 100 மதிப்பீட்டு நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.



இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,



"இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஒகஸ்ட் 27 ஆம் திகதி வரை இடம்பெறும். இந்த பரீட்சைக்காக 472,554 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். அந்தத் தேர்வர்களின் சுமார் 2.6 மில்லியன் விடைத்தாள்கள், அதாவது கிட்டத்தட்ட 90%, இந்த கட்டத்தில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.  27,500 ஆசிரியர்கள் இதற்கான பணிகளில் ஈடுபடவுள்ளனர். பாடசாலை விடுமுறை நாட்களில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் நடைபெறும். எனவே, மதிப்பீட்டு நடவடிக்கைகள் காரணமாக எந்த பாடசாலையும் மேலதிகமாக மூடப்படாது. அதன்படி, 56 நகரங்களில் உள்ள 100 மதிப்பீட்டு நிலையங்களில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன" என்றுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »