அரசாங்கம் ''சனல் - ஐ" யை லைக்கா நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது என தேசிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான ''சனல் - ஐ" ஜூன் 30ம் திகதி முதல் ஆறு மாதங்களிற்கு விஐஎஸ் ஒலிபரப்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
''சனல் - ஐ" யின் ஒளிபரப்பு நேரம் எந்த வெளிப்படை தன்மையுமின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த ரூபவாஹினி ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து ஊடக அமைச்சர் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார் என நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம்சாட்டியுள்ளார்.
எனினும் அமைச்சரவை இதற்கு அனுமதி வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
விஐஎஸ் ஒளிபரப்பு நிறுவனத்தின் எஸ்பிடி சனலின் நிகழ்ச்சிகளை ''சனல் - ஐ" யில் ஒளிபரப்பு செய்யும் திட்டம் காணப்படுகின்றது இந்த சனல் லைக்கா மொபைலிற்கு சொந்தமானது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும் பந்துல குணவர்த்தனவும் ''சனல் - ஐ" யின் உரிமையை முதலில் ஆறு மாதங்களிற்கும் பின்னர் இரண்டு வருடங்களிற்கும் வழங்க திட்டமிட்டுள்ளனர் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.