பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
"இங்கு ஆயுர்வேதம் என்ற பெயரில் மசாஜ் நிலையங்கள் நடத்தப்படுகின்றன. ஒருவரிடம் 5,000 ரூபாய் வசூலிக்கும் இடங்களும் உண்டு" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தெஹியத்தகண்டிய சாலிகா நகர மண்டபத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.