லங்கா பிரீமியர் லீக் தொடரின் கிண்ணத்தை பி - லவ் கண்டி அணி சுவீகரித்துக் கொண்டது..
தம்புள்ளை அவுரா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பி - லவ் கண்டி அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்று கிண்ணத்தை வென்றது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புளை அவுரா அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றிருந்தது.
அந்த அணியின் சார்பில் தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 36 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். கண்டி அணி சார்பில் சதுரங்க டி சில்வா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பி - லவ் கண்டி அணியினர் 19.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றுள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் பி - லவ் கண்டி அணியினர் முதல் முறையாக லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை தனதாக்கியுள்ளனர்.