இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று பிற்பகல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பம்பலபிட்டி – கரையோர (மெரின் டிரைவ்) வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மித்துள்ள குறுக்கு வீதியொன்றிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
வேன் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்களினால், கார் ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து, வேன் மற்றும் கார் ஆகியவற்றில் பயணித்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளர்.
துப்பாக்கி பிரயோகத்தினால் காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியிலிருந்து சில துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.