கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிறுவர் இருதய சிகிச்சைப் பிரிவின் பல சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
கராப்பிட்டிய வைத்தியசாலையில் இருதய பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தொழிலுக்காக வெளிநாடு சென்றமையால் இந்த நிலை தோன்றியுள்ளது.
இதன் காரணமாக சிறுவர்களுக்கான இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகக் குழு தெரிவித்தது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுவர் இருதய அறுவை சிகிச்சையை அவர் மாத்திரமே மேற்கொண்டதாகவும் அவருடைய வெற்றிடத்தினை பூர்த்தி செய்வது அவ்வளவு இலகுவாகாது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் வைத்தியர் தினேஷ் யாப்பா தெரிவித்தார்.