ரூபவாஹினி 'சேனல் ஐ' அலைவரிசையை லைக்கா நிறுவனத்திற்கு விற்பதற்கென ஊடகத்துறை அமைச்சர் பந்துலவினால் முன்வைக்கப்பட்ட யோசனை அமைச்சரவையில் இன்று நிராகரிக்கப்பட்டு விட்டதாக அறியமுடிகிறது.
ஏற்கனவே ஜூலை மாத இறுதியில் 'லைக்கா' நிறுவனத்திற்கு 'சேனல் ஐ' நிறுவனத்தை வழங்க இரு தரப்பினரும் இணங்கியதாகவும், ஆனால் ரூபவாஹினி பணிப்பாளர் சபை அல்லது வெகுஜன ஊடக அமைச்சின் முன் அனுமதி இதற்காக பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையாக விமர்சித்துள்ளதாக அறியமுடிந்தது.
இந்தப் பின்னணியிலேயே 'சேனல் ஐ' அலைவரிசையை லைக்கா நிறுவனத்திற்கு வழங்கும் யோசனையை அமைச்சரவை நிராகரித்தது.