கம்பளை கிரிக்கட் லீக்கின் இரத்த தான நிகழ்வு
கடந்த 13/08/2023 ஞாயிற்றுக் கிழமை கஹட்டப்பிட்டிய ஜூம்ஆ மஸ்ஜித் திருமண மண்டபத்தில் இரத்த தான நிகழ்வொன்று கம்பளை தள வைத்தியசாலையுடன் இணைந்து
உதிரம் கொடுப்போம் மனிதம் காப்போம் எனும் கருப்பொருளில் மிகச் சிறப்பாக நடை பெற்று முடிந்தது.
இந் நிகழ்வில் ஆண்கள்,பெண்கள் என இன மத வேறுபாடின்றி 100 பேர் இரத்த தானம் செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிகழ்வு கம்பளை கிரிக்கட் லீக்கின் ஒரு தசாப்தகால பயணத்தின் நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.
தகவல்
Gampola cricket league (GCL)
கம்பளை கிரிக்கட் லீக் (GCL)