Our Feeds


Monday, August 14, 2023

Anonymous

Exclusive - ரக்குவானையில் RSS அமைப்பின் போதனைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு - மதவாதத்தை பரப்புவதாக குற்றச்சாட்டு

 



இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பு நேற்று நடத்திய கூட்டமொன்றில் அவர்கள் வழங்கிய போதனைக்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், குறித்த கூட்டத்தை உடனடியாக நிறுத்தி போதனையாளர்களையும் வெளியேற்றியுள்ளனர்.


பெருந்தோட்டப்பகுதிகளில் அண்மைக்காலமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவரும் சூழலில் இரத்தினபுரி இறக்குவானையில் நேற்று நடைபெற்றுள்ள சம்பவம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.


பெருந்தோட்டப்பகுதிகளை மையப்படுத்தி  ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு கட்டமாக நேற்று இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பலாங்கொடை மற்றும் இரத்தினபுரியை மையப்படுத்தி செயல்படும் செயல்பாட்டாளர்கள் காலை 10 மணியளவில் கூட்டமொன்றை நடத்தியுள்ளனர்.


இக்கூட்டத்தில் இறக்குவானை நகர் மற்றும் அண்டிய தோட்டப்பகுதியில் உள்ள மக்களை இவர்கள் அழைத்துள்ளனர். கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்களுக்கு தீவிர மதப் போதனைகளை வழங்குவதாக சிலர் கூச்சலிட விடயத்தில் ஆலய நிர்வாக சபையினர் தலையிட்டுள்ளனர்.


தீவிர மதப் போதனைகளுக்கு அனுமதிக்க முடியாதெனவும் இது மதவாத போக்குக்கு வழிவகுக்கும் எனவும் கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு போதனைக்காக வந்தவர்களும் ஆலய நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


எதிர்காலத்தில் இவ்வாறான போதனைகளுக்கு அனுமதியளிக்கப்படாது எனவும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.


ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளர்கள் மலையக பகுதியில் மிகவும் வறுமையான மக்களை இலக்குவைத்து தீவிர மதவாத போக்குகள் அவர்களை ஈர்க்கும் விதத்தில் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர்களுக்கு பல உதவிகளை வழங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.


மேலும், ரக்வானையிலுள்ள பாடசாலையொன்றில் பழைய மாணவர்களினால் கோவில் ஒன்று நிர்மானிக்கப்பட்டதாகவும், கொரோனா தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த கோவிலின் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத நிலையில் அதனை முழுமையாக தாம் கட்டித் தருவதாகவும் கூறியே RSS அமைப்பு ரக்வானை பகுதியில் தமது செயல்பாட்டை முன்னெடுக்க முனைவதாக கூறப்படுகிறது.





நன்றி: ஒருவன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »