இலங்கையில் எலெக்ட்ராடெக் (Elektrateq) எனும் பெயரில் புதிய மின்சார முச்சக்கர வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தொழில்நுட்ப நிறுவனமான வெகா இனொவேசன் (Vega Innovation), இந்த புதிய ரக மின்சார முச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாரம்பரிய முச்சக்கர வண்டிகள் போலல்லாமல், எலெக்ட்ராடெக் எனும் இந்த முச்சக்கர வண்டியானது, பல்துறை பயன்பாட்டை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தினசரி சவாரி செய்வதற்கும், சிறு வணிக வாகனமாகவும், சரக்கு போக்குவரத்து வாகனமாகவும் டாக்ஸியாகவும் பயன்படுத்தத்தக்க வகையில், இந்த புதிய மின்சார முச்சக்கர வண்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மணி நேரத்தில் 80% பேட்டரி திறனை எட்டக்கூடிய விரைவான சார்ஜிங் அமைப்பைக் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.