Our Feeds


Wednesday, August 30, 2023

SHAHNI RAMEES

#BREAKING: ஹஜ் குழுவின் தலைவர் பதவியிலிருந்து அன்சார் ராஜினாமா.

 



ஹஜ் குழுவின் தலைவர் பதவியிலிருந்து அன்சார் ராஜினாமா.


அரச ஹஜ் குழுவின் தலைவர் பதவியிலிருந்து இப்றாஹீம் அன்சார் ராஜினாமா செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் நேற்று (29) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற  கூட்டமொன்றிலேயே குறித்த ராஜினாமத் தொடர்பான அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார். 


ஹஜ் பேசா பங்கீட்டில் அரசியல் தலையீடு தொடர்வது தொடர்பில் கடந்த வாரம் விடிவெள்ளி, விடியல் மற்றும் Short News போன்ற ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்திருந்தன. 


அது மாத்திரமல்லாமல்,  இந்த பேசா விசாவில் அமைச்சர் நசீர் அஹமத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல் ஆகியோரும்  அவர்களது குடும்பத்தினரும் ஹஜ் சென்றிருந்த விடயம் தெரியவந்தது. இச்செய்தி வைரலாக மக்கள் மத்தியில் பரவியமையினால் குறிப்பிட்ட இரண்டு அரசியல்வாதிகளுக்கு பாரிய நெடுக்கடியினை வழங்கியது. 


இதனை மறுத்து அமைச்சர் நசீர் அஹமத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல் ஆகியோர் விசேட ஊடக அறிக்கைகளையும் தனித் தனியே வெளியிட்டிருந்தனர். 


இந்த நிலையில், மேற்படி அரசியல்வாதிகள் இருவரும் பேசா விசாவிலேயே சென்றதாக இப்றாஹீம் அன்சார் நேற்று Short Newsக்கு வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்திருந்தார். 


குறித்த விடயம் புத்தசாசன, சமய விவகார மற்றம் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிற்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளதாகவும். இவ்வாறான நிலையிலேயே, அரச ஹஜ் குழுவின் தலைவர் பதவியிலிருந்து இப்றாஹீம் அன்சார் ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »