தொல்பொருள் திணைக்களத்தின் கடுமையான விதிகளின்படி தமிழ் மக்கள் அமைதியாக பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பகுதிக்குள் குருந்தூர்மலையில் ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து தமிழர்களின் பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றார்.
குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் ஐந்து பஸ்களில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளில், ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (18) பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அடிப்படையில் மூன்று பஸ்கள் மற்றும் இரண்டு ஹன்ரர்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக கொண்டு வரப்பட்டிருக்கின்றார்கள்.