மாறிவரும் உலகுடன் இசைவாக்கம் அடைய இலங்கை சிறுவர்கள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்தார்.
எதிர்கால உலகுக்கு ஏற்றவர்களாக மாறுவதற்கு இலங்கையின் கல்வியானது தீவிரமாக மாற்றமடைய வேண்டுமென நுகேகொடை அனுல வித்தியாலய பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி தெரிவித்தார்.
புதிய பாடங்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். மாறி வரும் உலகிற்கேற்ப ஆங்கிலத்துடன் சேர்த்து ஹிந்தி மற்றும் சீன மொழிகளை எமது சிறார்கள் கற்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.