உளநலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக உளநல மருத்துவர்களை சந்திப்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் உளவியலாளர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அழுத்தம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை ஆகியவை இந்த பெரும்பாலான மன அழுத்த சூழ்நிலைகளுக்கான முக்கிய காரணங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை, இளைஞர்களின் நம்பிக்கை வீழ்ச்சி, எதிர்மறையான நிச்சயமற்ற மனநிலை, பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு பணம் தேடும் முயற்சியில் தோல்வி என்பன இந்த மன அழுத்தத்தின் பிரதான காரணங்கள் என காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ரூமி ரூபன் மேலும் தெரிவித்தார்.