வயாங்கொட, மாரபொல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களைக் கடத்த முயன்ற முச்சக்கர வண்டி சாரதி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த கல்லூரியில் ஏழாம் ஆண்டு மாணவன் ஒருவன் மினுவாங்கொடை யகஹடுவ வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அருகில் நிறுத்தியிருந்த முச்சக்கரவண்டியின் சாரதி அவனை பாடசாலைக்கு அருகில் இறக்கி விடுவதிக கூறி அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.
முச்சக்கரவண்டியில் பயணித்த மாணவனின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது நண்பர்கள் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார்.
பாடசாலைக்கு அருகில் முச்சக்கர வண்டி நில்லாது சென்றுகொண்டிருந்த போது மூன்று மாணவர்களும் சத்தமிட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹிரிபிட்டிய பிரதேசத்தில் வீதி தடைப்பட்ட போது மூன்று மாணவர்களும் முச்சக்கரவண்டியில் இருந்து குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தையான ஆசிரியர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்
இது தொடர்பான விசாரணைகளை வயாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.