Our Feeds


Thursday, August 3, 2023

Anonymous

மலையக எழுச்சிப் பயணம் - சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட சர்வதேச அமைப்புகள் ஆதரவு

 



மலையக எழுச்சி பயணத்திற்கு சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட சர்வதேச அமைப்புகள் ஆதரவு வெளியிட்டுள்ளன.


சர்வதேச மன்னிப்புச்சபை - போரம் ஏசியா - சிவிகஸ் - புரோன்ட்லைன் டிவென்டர்ஸ் ஆகிய  அமைப்புகள் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான நடைபயணத்தில் பங்குகொள்ளும் மலையக தமிழர்கள் - மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவை தெரிவிக்கின்றன.

மாண்புமிகு மலைய மக்கள் கூட்டமப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடைபயணம் தென்னிந்தியாவிலிருந்து இலங்கை;கு மலையகத்தில் உள்ள தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக அனுப்பப்பட்ட ஆண்கள் பெண்களின் சவாலான பயணத்தை மீட்டெடுக்கின்ற ஒரு முயற்சியாகும்.

1823 இல் இது இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கான ஆரம்பகால தமிழர்கள் காடுகளை அகற்றுவது ஆபத்தான விலங்குகளை எதிர்கொள்வது போன்ற  உயிராபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் கடும் சவாலான  வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த பயணத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்.

200 வருடங்களுக்கு பின்னர் இன்றும் சமூகம் தொடர்ந்தும்  ஒழுங்கமைக்கப்பட்ட பாரபட்சம் மிகமோசமான வறுமை ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளனர்- அவர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டுள்ளது என சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »