Our Feeds


Tuesday, August 15, 2023

News Editor

சீனாவுக்கு பயணமானார் பிரதமர் தினேஷ் குணவர்தன


 சீனாவுக்கான நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (14) இரவு கொழும்பிலிருந்து சீனாவுக்கு பயணமானார்.


சீன வர்த்தக அமைச்சு மற்றும் யுவான் மாகாண அரசு இணைந்து நடத்தும் 7வது சீன - தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சி மற்றும் 27வது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கண்காட்சி ஆகியவற்றில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.


சீனாவின் குன்மிங்கில் ஒகஸ்ட் 16 முதல் 20 வரை இந்த எக்ஸ்போ கண்காட்சி நடைபெறவுள்ளது.


எக்ஸ்போ ஏற்பாட்டாளர்களின் கருத்துப்படி, இந்த மாபெரும் வர்த்தக கண்காட்சியில் 60 நாடுகள் பங்கேற்கவுள்ளன.


அவை அனைத்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளும், பிராந்திய பொருளாதார பங்குடமை RECP உறுப்பு நாடுகளும் அடங்கும். ‘பொது அபிவிருத்திக்கான ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு’ என்ற கருப்பொருளின் கீழ் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.


இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, ஜானக வக்கும்புர மற்றும் கனக ஹேரத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »