தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இணைந்து இதனை நடைமுறைப்படுத்துகின்றது.03 முறைகளின் ஊடாக இந்த வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முறை சொந்த நிலத்தில் வீடு கட்டுவது. இரண்டாவது, நகரத்திற்கு வெளியே அவர்கள் விரும்பும் பகுதியில் நிலமற்றவர்களுக்கு வீடுகள் கட்டுவது. மூன்றாவது முறை அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவது.
இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நிதியுதவி வழங்குவதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது தொடர்பான கூட்டு அமைச்சரவை பத்திரம் பொறுப்பு அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.