யாழ்ப்பாணம் - சுழிபுரம் பறாளை முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரமானது சங்கமித்தையால் நாட்டப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுழிபுரத்தில் இந்த போராட்டம் இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.