Our Feeds


Monday, August 21, 2023

News Editor

மீண்டும் ஜித்தாவுக்கு விமான சேவைகள்


 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பில் இருந்து ஜித்தாவுக்கான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் செவ்வாய், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் மூன்று சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மட்டுமே தற்போது இவ்விரு நகரங்களுக்கிடையில் தொடர்ச்சியான விமான சேவையை வழங்கும் ஒரே விமான சேவையாகும். இச்சேவைகளின் ஊடாக இலங்கையில் இருந்து உம்ராவுக்காக புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கு செல்லும் யாத்ரீகர்கள் சௌயகரியமான சேவையைப் பெற்றுக்கொள்ள மீண்டும் வழி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து செல்லும் பருவகால ஹஜ் யாத்ரீகர்களுக்கும் வருடம் முழுவதும் உம்ராவுக்காக செல்லும் யாத்ரீகர்களுக்கும் விருப்பத்திற்குரிய பயணத் தேர்வாக விளங்கும் ஜித்தாவுக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமான சேவை வரலாறானது 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாகும். நேரடி விமான சேவைக்கு மேலதிகமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த பயணிகளின் விசேட தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, நடமாடும் சிக்கல்கள் உள்ள பயணிகள் போன்ற தேவையுள்ளவர்களுக்கு மேலதிக உதவிகளையும் வழங்குகிறது.

கொழும்பில் இருந்து தம்மாம் மற்றும் ரியாத்துக்கு தினசரி விமான சேவைகளை மேற்கொண்டுவரும் இந்த விமான நிறுவனம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள மூன்று நகரங்களுக்கு மொத்தம் 17 வாராந்த விமான சேவைகளை பயணிகளுக்கு வழங்குகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »