கேகாலையில் தரை மட்டத்திலிருந்து 124 மீற்றர் ஆழத்தில் போகல மினிரன் சுரங்கத்தில் உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் உணவை பெற்றுக்கொள்வதற்கான வசதி காணப்படுகிறது.
போகல மினிரன் சுரங்கம் என்று அழைக்கப்படும் "விஜயபால மலலசேகர" சுரங்கத்தில் இந்த உணவகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த மினிரன் சுரங்கத்தை பார்வையிட சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதோடு, 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் நுழைய அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான போகல மினிரன் சுரங்கத்திலிருந்து கிராஃபைட் ஏற்றுமதியானது இந்நாட்டிற்கு கணிசமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்துள்ளது.