புதிய சுங்க ஊடகப் பேச்சாளராக சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.
01.08.1989 அன்று உதவி சுங்க அத்தியட்சகராக சுங்கத் திணைக்களத்தில் சேவையில் இணைந்த சிவலி அருக்கொட அவர்கள் தற்போது 34 வருட சேவையை நிறைவு செய்துள்ளார்.
சுங்கச் சட்டம் மற்றும் அவற்றின் நடைமுறைகள் குறித்து நன்கு அறிந்தவர், தற்போது சுங்க விலை ஆய்வுத் துறையின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.