இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இலங்கை வரவுள்ள சீனக் கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அந்த வகையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி நிறுவனத்துடன் (நாரா) இணைந்து இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 'ஷி யான் 6' என்ற சீனக் கப்பலுக்கு நாரா மற்றும் வெளிவிவகார அமைச்சின் கோரிக்கையின் பேரில் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.