Our Feeds


Thursday, August 17, 2023

SHAHNI RAMEES

நியூயார்க் நிர்வாகம் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பு...!

 



சிறந்த பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் இருந்து வருகிறது.

பயனர்கள் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்த இதை ஒரு சிறந்த தளமாக பயன்படுத்தி வருகின்றனர். 




உலகளவில் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.




இந்த செயலியின் நிறுவனம் சீனாவை சேர்ந்தது. டிக்டாக் செயலி மூலம் தரவுகளை திருடுவதாகவும், தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சீன அரசாங்கம் மீது பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டின. 




ஆனால் டிக்டாக் செயலி நிறுவனம் மற்றும் சீன அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தன. இந்தியா உள்ளிட்ட நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தன. அமெரிக்கா கடந்த 2022 ஆம் ஆண்டு சில விதிவிலக்குடன் டிக்டாக் செயலியை அரசாங்க சாதனங்களில் பயன்படுத்த தடைவிதித்தது.




இந்த நிலையில் நியூயார்க் மாநில நிர்வாகம் அரசாங்க சாதனங்களில் டிக்டாக் செயலியை முற்றிலும் பயன்படுத்த தடைவிதித்துள்ளது. 




பாதுகாப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நியூயார்க் மேயருக்கான ஊடகப் பேச்சாளர் ஜோனா ஆலோன் 'டிக்டாக் செயலிலால் நகரின் டெக்னிக்கல் நெட்வொர்க்கிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக சைபர் பிரிவு தெரிவித்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.




நியூயார்க் மாநலம், மூன்று வருடத்திற்கு முன்னதாக சில விதிவிலக்குடன் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »