Our Feeds


Wednesday, August 30, 2023

SHAHNI RAMEES

மீண்டும் தையிட்டியில் போராட்டம் ஆரம்பம்..!

 

தையிட்டியிலே அமைக்கப்பட்டிருக்கின்ற சட்ட விரோத விகாரை கட்டுமானத்திற்கு எதிராக எங்களுடைய போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.!!

நாங்கள் சிங்கள மக்களின் காரணிகளை நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை அவர்களின் காணிகளை நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை அவர்களின் வழிபாட்டு இடங்களை நகர்த்தும் இல்லை வழிபாட்டு இடங்களை தகர்ந்தி விட்டு எங்களுடைய வழிபாட்டு இடங்களை அமைக்கவில்லை.

தையிட்டி எங்களுடைய பூர்வீக பிரதேசம் இது சைவ தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி இந்தக் காணிக்குள்ள வந்து சட்ட விரோதமாக விகாரையை அமைந்திருக்கின்ற படியில் தான் இங்கு நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறது.

சட்ட விரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக இங்கு தமிழ் மக்களின் பூர்வீகத்துக்கு காணிக்குள் வந்து சைவக் கோயில் இருந்ததாக வரலாறு இருக்கின்றது.

அந்தக் காணிக்குள் வந்து சட்ட விரோதமாக விகாரையை கட்டி இருப்பதை தான் நாங்கள் எதிர்கின்றோம். சாதாரன சிங்கள குடிமகன் தமிழ் மக்களது சேர்ந்து வாழ விரும்பினால் வட கிழக்கிலே காணி வாங்கி வீடு கட்டுவதை நாம் எதிர்க்கவில்லை. அந்த உரிமை அனைவருக்கும் இருக்கின்றது ஆனால் திட்டமிட்ட வகையில் இன அழிப்பு செய்கின்ற நோக்கில் எங்களுடைய மக்களின் அடையாளங்களை தகர்ப்பதற்காக வருகின்ற சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்பு அந்த நோக்கத்தில் வருகின்ற விகாரைகளையும் எதிர்ப்போம். அந்த வகையில் தையிட்டி விகாரையும் எதிர்கின்றோம் எதிர்த்து கொண்டே இருப்போம்.

இது எங்களுடைய இனத்தினுடைய எதிர்காலம் இருப்போட சம்மந்தப்பட்ட விடயம்.. ..

க.சுகாஷ்,
ஊடகப் பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »