Our Feeds


Tuesday, August 22, 2023

Anonymous

மற்றுமொரு பச்சிளம் குழந்தை மரணம்! - மருந்துதான் காரணமா?

 



கொழும்பு, ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எட்டு மாத குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


குறித்த குழந்தைக்கு மருந்தொன்று வழங்கப்பட்டதன் பின்னர் நோய் தீவிரமடைந்து உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அவிசாவளை எபலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் எட்டு மாத வயதுடைய டெஷான் விதுநெத் சுகயீனம் காரணமாக ஓகஸ்ட் 4 ஆம் திகதி அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக ஓகஸ்ட் 5 ஆம் திகதி கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு டெஷான் மாற்றப்பட்டார்.

குழந்தைக்கு நோய் இருப்பதை உறுதி செய்யாமல் யூகத்தின் அடிப்படையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அப்போது கொடுக்கப்பட்ட வலிப்பு எதிர்ப்பு மருந்து காரணமாக குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை டெஷான் கடந்த 19ம் திகதி உயிரிழந்தார்.

டெஷானின் உடல் நேற்று பிற்பகல் குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், மருந்து ஒவ்வாமை காரணமாக குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய மறுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »