கொழும்பு – வாழைத்தோட்டம், மார்டிஸ் ஒழுங்கைப் பகுதியில் வைத்து கெசல்வத்த பொடிக்கவி என்றழைக்கப்படும் காவிந்த டில்ஷான் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளிகளுடன், நேற்று பிற்பகல் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மருதானை பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 30 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், குற்றச்செயலின் போது பிரதான சந்தேகநபர்கள் பயன்படுத்திய உந்துருளியை இந்த இருவருமே வைத்திருந்ததாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வாழைத்தோட்டத்தில் உள்ள பொடிக்கவியின் வர்த்தக நிலையத்தின் முன் 20 வயதுடைய இளைஞன் நின்று கொண்டிருந்த போது உந்துருளியில் வந்த இருவர் கடந்த மாதம் 30ஆம் திகதி துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியிருந்தனர்.