நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பல மாகாணங்களில் கடும் வரட்சி நிலவுகிறமையால் பொதுமக்களிடம் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் வரட்சியால் 22,666 குடும்பங்களை சேர்ந்த 72,357 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், குடிநீர் கிடைக்காத மாகாணங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகின்றதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.