இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் முதல் முறையாக மகளிர் உலக கிண்ணத்தை வென்றது.
அவுஸ்திரேலியாவில் நடந்த இந்த போட்டியில் 29வது நிமிடத்தில் கப்டன் ஓல்கா கார்மோனா கோல் அடித்தார். இங்கிலாந்து இரண்டாவது பாதியில் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், ஆட்டத்தை சமனிலைப்படுத்த முடியவில்லை.
மகளிர் உலக கிண்ணத்தை வென்ற ஐந்தாவது அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றது.
2023 FIFA மகளிர் உலக கிண்ண இறுதிப் போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஸ்பெயினின் சல்மா பாரலுலோவுக்கு FIFA சிறந்த இளம் வீராங்கனை விருது வழங்கப்பட்டது.
இங்கிலாந்தின் மேரி ஏர்ப்ஸ் சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருதைப் பெற்றார். ஸ்பெயினின் ஐதானா பொன்மட்டிக்கு தங்கப்பந்து விருது வழங்கப்பட்டது.