மன்னர் சார்ள்ஸின் உத்தியோகபூர்வ முடிசூட்டு விழா கடந்த மே மாதம் 6 ஆம் திகதி லண்டனில் கோலாகலமாக இடம்பெற்றது.
இந்த நிலையில் மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயத்தை, இங்கிலாந்து நாணயங்களை அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் 'தி ரோயல் மின்ட்' நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த நாணயம் உடனடியாக புழக்கத்துக்கு வரும் என 'தி ரோயல் மின்ட்' நிறுவனம் தெரிவித்துள்ளது.