நாட்டில் வைத்தியர் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு வைத்தியர்களை இந்நாட்டிற்கு கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் விதித்துள்ள அதிக வரிப்பணமும் தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சுமையும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பிரதான காரணம் எனவும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் வைத்தியசாலை நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
வைத்தியர்களின் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில் இருவர் இருந்த இடத்தில் ஒருவரையும் அல்லது மூவர் இருந்த இடத்தில் இருவரையும் வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என விசேட வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்தார்.