யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஓரு இலட்சம் பேர் முறையான குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.