Our Feeds


Wednesday, August 9, 2023

Anonymous

இலங்கை சாரணர்களை அவசர அவசரமாக வெளியேற்றியது தென்கொரியா - நடந்தது என்ன?

 



தென் கொரியாவில் நடைபெறும் உலக சாரணர் நிகழ்வில் கலந்து கொண்டுள்ள 176 இலங்கை சாரணர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள தென்கொரிய தூதரகம் தெரிவித்துள்ளது.


இன்றைய தினம் தென்கொரியாவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற வெப்ப மண்டல புயல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, தென் கொரியாவில் நடைபெறும் உலக சாரணர் நிகழ்வில் கலந்து கொண்டுள்ள 176 இலங்கை சாரணர்கள் தொடர்பில் தீவிரமாக கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது ட்விட்டர் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை சாரணர் சங்கத்தின் உதவியுடன் குறித்த சாரணர்களினது பாதுகாப்பு மற்றும் உடல் நலம் குறித்து தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள வெப்ப மண்டல புயல் காரணமாக அங்கு சர்வதேச நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த ஆயிரக்கணக்கான சாரணர்கள் முகாம்களிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »