சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கையெழுத்துக்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (13) முன்னெடுக்கப்பட்டது.
அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த கையெழுத்து சேகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பத்தாயிரம் கையெழுத்துடன் கூடிய மனு சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.