Our Feeds


Friday, August 4, 2023

News Editor

சிகரெட்டில் எச்சரிக்கை வாசகத்தை பதித்த கனடா


 சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகத்தை ஒவ்வொரு சிகரெட்டிலும் அச்சடிக்கும் கொள்கை ரீதியான முடிவை ஒகஸ்ட் 1 ஆம் திகதி முதல் கனடா நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.


உலக அளவில் சிகரெட் பிடிப்பதால் கோடிக் கணக்கிலான மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். 


அதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நாடுகளின் அரசாங்கம் சிகரெட் உட்பட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் அந்தப் பொருட்களில் படங்கள் மற்றும் வாசகங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றன.


இந்தியா, கனடா போன்ற நாடுகளில் புகையிலை வஸ்துக்கள் மீது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 


இதனை புகையிலையை பயன்படுத்தி வருபவர்களும் அறிவார்கள். இந்த சூழலில் ஒவ்வொரு சிகரெட்டிலும் சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகத்தை அச்சடிப்பது தொடர்பாக கொள்கை ரீதியாக கனடா அரசாங்கம் கடந்த ஆண்டு முடிவை செய்தது.


நடப்பு ஆண்டின் பிற்பாதியில் இது செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகத்தை அச்சிட்டு, கனடாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


'ஒவ்வொரு பஃப்பிலும் விஷம்', 'சிகரெட் ஆண்மைக் குறைவை ஏற்படுத்துகிறது', 'சிகரெட் புற்றுநோயை ஏற்படுத்தும்', 'சிகரெட் புகை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்', 'சிகரெட் உங்கள் உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுத்தும்' போன்ற வாசகங்கள் ஒவ்வொரு சிகரெட்டிலும் கனடாவில் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


இப்போதைக்கு கிங் சைஸ் சிகரெட்டில் இந்த வாசகங்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »