நாட்டில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன்படி கடந்த வாரம் 1 லட்சத்து 57 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்றைய தினம் ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேநேரம் 1 லட்சத்து 72 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்று ஒரு லட்சத்த 75 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதேவேளை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் ஆயிரத்து 926 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.