பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விவகாரம் தொர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
இம்ரான்கானுக்கு மூன்றாண்டு சிறை. ஐந்தாண்டு அரசியல் இல்லை, ஆரம்பத்திலிருந்தே அவரை அரசியலிலிருந்து அகற்ற அவசரம் காட்டினார்கள். இந்த நாடு உருப்படவே படாது போல.! வளராது தேய்ந்தே போயிடும் போல.!
நல்லவேளை வங்களாதேசம் பிரிந்து, இன்று வளருகிறது. இல்லாவிட்டால் வங்காளதேசிகளும் தேய்பிறையாக தேய்ந்து போயிருப்பர்” – என்றுள்ளது.
தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 ஆண்டுகள் தகுதி நீக்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபா அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.