Our Feeds


Saturday, August 26, 2023

News Editor

நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது


 நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் குளங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது.


சில பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கு நீரை பெறுவதில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் வறட்சியால் தேயிலை விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது, கடும் சிரமத்துக்கு மத்தியிலேயே கொழுந்து கொய்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வறட்சியான காலநிலையால் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறைவடைந்துள்ளது.

அத்துடன், மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கம் அமைக்கும்போது நீருக்குள் சங்கமமான பழைய மஸ்கெலியா நகரத்தின் இருப்பிடங்கள், புராதன கோயில், விகாரை, பாலங்கள் உட்பட பல்வேறுப்பட்ட ஞாபக சின்னங்கள் தற்போது வெளியில் தோன்றுகின்றன. பெருமளவானவர்கள் இதனை பார்வையிட்டும் வருகின்றனர்.

அதேவேளை, மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் மனித செயற்பாடுகளால் காட்டு தீ சம்பவங்களும் அதிகரித்துள்ளன.



-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »