வகுப்பு ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதால் அதிர்ச்சியடைந்த பாடசாலை மாணவியொருவர் நேற்று (04) சில மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்டுபத பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக குளியாபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொஸ்தெனிய, சியம்பலாவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 23ம் திகதி வகுப்பு ஆசிரியர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்து மாத்திரை உட்கொண்டதாவும் மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், கட்டுபத பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.