உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட வாள்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பாதுகாப்புப் படையினரால் ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
ரங்கல கடற்படைத் தளத்திலிருந்து 17 கடல் மைல் தொலைவில் உள்ள 1,000 அடி ஆழமான கடல் பகுதியிலேயே இவைகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் வாள்களுடன் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் அடங்குகின்றன.
கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவுக்கமைய, இவைகள் மூழ்கடிக்கப்பட்டன.