கொரிய தீபகற்பத்தில் அடிக்கடி போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தும் வடகொரியா சமீபத்தில் அங்கு உளவு செயற்கைக்கோள்களை அனுப்ப முயற்சித்தது.
அதன் இரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் வருகின்ற ஒக்டோபர் மாதம் அடுத்த உளவு செயற்கைக்கோள்களை அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் வடகொரியா நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம் இடம்பெற்றது.
அப்போது வடகொரியா தொடர்பான பிரச்சனையில் சீனா மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்கா குற்றச்சாட்டியுள்ளது.
இதற்கு பதில் அளித்த ஐ.நா.வுக்கான சீனாவின் நிரந்தர தூதர் கெங் ஷுவாங் தெரிவிக்கையில், ஹசீனா மற்றும் ரஷ்யா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு பதிலாக பிரச்சனையை தீர்ப்பதற்கான திட்டங்களை வகுக்கலாம். இதற்காக அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் இணைந்து வடகொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.