இந்திய - இலங்கை சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்பில் மற்றொருவரை இந்தியாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வைத்து லிங்கம் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபார வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் வசிப்பவரான லிங்கம் என்ற குறித்த நபர் மற்றுமொரு சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள குணசேகரன் என்பவரின் நண்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள லிங்கம் என்ற நபர் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதை சட்டப்பூர்வமாக்கும் முயற்சியில் போலி அடையாள ஆவணங்களையும் தயாரித்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
இதேவேளை குறித்த சந்தேக நபர்கள் பாகிஸ்தானியரான ஹாஜி சலீம் என்பவரிடம் இருந்து சட்டவிரோத போதைப்பொருட்களை பெற்றுள்ளமையும் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.