துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்கவுக்கு நீதிமன்றத்தால் பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகள் சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தால் இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளன.
இதையடுத்து அவர் அவுஸ்திரேலியாவுக்குள் தடையின்றி பயணம் செய்ய முடியுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.