Our Feeds


Thursday, August 3, 2023

Anonymous

சிறுவர்கள் ஸ்மார்ட்போனில் இணையத்தை பயன்படுத்த கட்டுப்பாடு - சீனா கொண்டுவந்த அதிரடி திட்டம்.

 



சீனாவில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போனில் இணையத்தை பயன்படுத்தும் நேரத்தை நிர்ணயித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


சீனாவின் Cyberspace அமைச்சகம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 18 வயதின் கீழ் உள்ள சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலான இணைய சேவைகளை பெற முடியாது.

மேலும், 16 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த முடியும்.

8 முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டுமே இணையம் பயன்படுத்த வேண்டும். 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் மட்டுமே இணையம் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநலத்திற்கு உகந்தவையாக கருதப்படும் செயலிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அவை எந்தெந்த செயலி என்ற பட்டியலை Cyberspace வெளியிடவில்லை.

இளம் தலைமுறையினர் இணையத்திற்கு அடிமையாவதிலிருந்து காக்க இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதலே குழந்தைகளுக்கான Online கட்டுப்பாடுகளை சீனா கடுமையாக்கி வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »