சமீபத்தில் ரஷ்யா நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய லூனா 25 என்ற விண்கலத்தை அனுப்பியது.
அந்த விண்கலம் ஒகஸ்ட் 21 ஆம் திகதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், 19 ஆம் திகதி விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதியது. இதனால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.
இந்தியா கடந்த ஜூலை மாதம் விண்ணில் செலுத்திய சந்திரயான்-3 நேற்று முன்தினம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வுப் பணியை தொடங்கியது.
இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்து உலக நாடுகளின் பார்வை ஜப்பான் அனுப்பும் விண்கலத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
28 ஆம் திகதி காலை 9.26 மணிக்கு விண்கலம் செலுத்தப்படும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்சா) அறிவித்துள்ளது.
ரொக்கெட் செலுத்தும் நிகழ்வை காலை 8.55 மணி முதல் நேரலையில் ஒளிபரப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரத்தின் அடிப்படையில் 28 ஆம் திகதி விண்கலத்தை ஏவுவது சாத்தியமா இல்லையா? என்பதை மறுபரிசீலனை செய்வதாகவும் ஜாக்சா தெரிவித்துள்ளது.